Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 16, 2016

கருப்பு பெட்டி


விமானம் பறந்து கொண்டு இருக்கும்போது விமானிக்கும், விமானக் கட்டுப்பாட்டு அறைக்கும் தொடர்ந்து தகவல் பரிமாற்றம் நடைபெறும்.அதேபோல், விமானத்துக்குள் விமானியும், துணை விமானியும் விமானத்தை இயக்குவது தொடர்பாக பேசிக் கொள்வார்கள்.

இவை அனைத்தும், ‘காக்பிட்’ எனப்படும் விமானி அறைக்குள்   வைக்கப்பட்டுள்ள  ‘கருப்பு பெட்டி’யில் பதிவாகும்.  பல ஆயிரம் அடி உயரத்தில் இருந்து விமானம் விழுந்து சுக்குநூறாக நொறுங்கினாலும், தீப்பிடித்து முழுவதும் கருகினாலும் அல்லது கடலில் பல மைல் ஆழத்தில் மூழ்கினாலும் கூட இந்த கருப்பு பெட்டி மட்டும்          பெரும்பாலும் சேதம் அடையாது. அவ்வளவு பாதுகாப்பான முறையில் இது தயாரிக்கப்படுகிறது.

விபத்து எப்படி நடந்தது? என்பதை அறிய, இந்த கருப்பு பெட்டியில் பதிவாகி இருக்கும் தகவல்தான் உதவியாக இருக்கும்.




கருப்பு பெட்டி’ கருப்பு நிறமாக இருக்காது. எளிதாக கண்டுபிடிக்கும் வகையில் ஆரஞ்சு நிறத்தில்இருக்கும்.

ஒரு விமானத்தில் சிறியது, பெரியது என 2 கருப்பு பெட்டிகள் இருக்கும்.

 பெரிய கருப்பு பெட்டிக்கு ‘பிளைட் டேட்டா ரிக்கார்டர்’ என்று பெயர். விமானம் பறக்கும் உயரம், வேகம், நேரம் போன்ற விவரங்களை இது பதிவு செய்யும்.

 சிறிய கருப்பு பெட்டிக்கு ‘வாய்ஸ் ரிக்கார்டர்’ என்று பெயர். விமானியின் அறையில் நடக்கும் உரையாடல்கள் மற்றும் அங்கு ஏற்படும் மற்ற சத்தங்கள் இதில் பதிவாகும்.

விபத்து நேர்ந்தால் அதிகம் பாதிக்காத வகையில், 2 பெட்டிகளும் வால் பகுதியில்தான் வைக்கப்பட்டு இருக்கும்.

இரண்டு கருப்பு பெட்டிகளும் 25 மணி நேரம் நடைபெறும் சம்பவங்கள், உரையாடலை பதிவு செய்யும்.

2012 பாரன்ஹீட் வெப்பத்தையும் தாங்கும்.

1000 டன் இரும்பு பாளத்தை போட்டாலும் நசுங்காது.

கடலில் பல மைல் ஆழத்தில் விழுந்தாலும் பாதிக்காது.

 இதன் பேட்டரிகள் 6 ஆண்டுகள் செயல்படும்.

 பெட்டியில் இருந்து தொடர்ந்து ‘பீப்’ ஒலி வந்து கொண்டே இருக்கும். விபத்து நடந்த இடத்தில் இருந்து பெட்டியை எளிதாக கண்டுபிடிக்க இது உதவுகிறது.

1953ல் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ள டேவிட் வாரன் விமான ஆய்வு மையத்தில் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது.


விமானம் விபத்துக்குள்ளானால் அந்த விபத்து எப்படி நடந்தது என்பதை அறிவதற்கு கருப்பு பெட்டி உதவுகிறது. விமானம் எப்படி விபத்துக்குள்ளானது என்பதை கருப்பு பெட்டி பதிவு செய்து வைத்திருப்பதால்தான் விமான விபத்து நிகழ்ந்துவிட்டால் தீவிரமாக கருப்பு பெட்டியை தேடுகிறார்கள். 1934ம் ஆண்டு டேவிட் வாரனின் தந்தை விமான விபத்தில் இறந்து போனார். அப்போது அந்த விமான விபத்து எப்படி நிகழ்ந்தது என்று யாருக்கும் தெரியவில்லை.

இப்படி ஒரு நிலை இருக்கிறதே இதை மாற்ற வேண்டும். தரையில் நடக்கும் விபத்துக்கான காரணங்கள் தெரிவது போல் வானில் நடக்கும் விபத்துக்கான காரணங்களும் தெரியவேண்டும். அதற்கான கருவியை கண்டுபிடிக்க வேண்டும் என்று தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அவரின் முயற்சிக்கு வெற்றி கிடைத்தது. கருப்பு பெட்டியை கண்டுபிடித்தார். இந்த கருப்பு பெட்டி 1953ம் ஆண்டிலிருந்து விமானங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.