Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 25, 2016

விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கட்டுப்பாடு!



விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கு, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம்  கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழா வரும் 5–ந்தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு, விநாயகர் சிலைகளை கரைக்க, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்  பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.
களிமண் மற்றும் ரசாயன கலவையற்ற கிழங்கு மாவில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுசூழலுக்கு பாதிக்கும் வகையில் ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க கட்டயாம் அனுமதிக்கப்பட மாட்டாது எனவும், விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
  

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.