August 25, 2016
உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளதாக கூறி பாஜக போராட்டம்!
உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் மீது காவல்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து கலைத்தனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை, தலித்கள் மீதான தாக்குதல், கொலை, கொள்ளை போன்றவை தொடர்ந்து அரங்கேறி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சியினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒருப்பகுதியாக பாரதிய ஜனதா கட்சியினர் உத்தரபிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டகாரர்களை தடுப்பு வேலிகளை கொண்டு காவல்துறையினர் தடுக்க முயன்றனர்.
தடுப்பு வேலிகளை உடைத்து விட்டு போராட்டகாரர்கள் முன்னேற முயன்றதால் காவல்துறையினர் அவர்களை தண்ணீரை பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும் கலைத்தனர். அதற்கு பதிலடியாக போராட்ட காரர்களும் காவல்துறையினரை நோக்கி கற்களை வீசியதால் பதற்றம் நீடித்தது.
உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளதாக கூறி பாஜக போராட்டம்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 25, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 25, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.