Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 11, 2016

அரசு பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் மீது தாக்குதல்!



ஓமலூர் அருகே அரசு பள்ளியின் உடற்கல்வி ஆசிரியரை, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். 
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காடையாம்பட்டி வட்டாரத்தில் உள்ள கே.மோரூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரனை பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஜெயக்குமார் தங்களுக்கு எதிராக செயல்படுவதாக கூறி தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த உடற்கல்வி ஆசிரியர் மயக்கமடைந்து பள்ளி வளாகத்திலேயே விழுந்தார். இதையடுத்து சக ஆசிரியர்களின் உதவியுடன் அவர், உயர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டுள்ளார். இதனிடையே ஆசிரியரை தாக்கிய பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெயக்குமார் மீது கொலை முயற்சி வழக்குபதிவு செய்து அவரை கைது செய்யவேண்டும் என்றும், அனைத்து ஆசிரியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.