August 8, 2016
சென்னையில் மனைவி மற்றும் குழந்தைகளை காருக்குள் வைத்து எரித்தாக கால் டாக்சி ஓட்டுனர் கைது
சென்னையில் தனது மனைவி மற்றும் குழந்தைகளை காருக்குள் வைத்து எரித்தாக சந்தேகத்தின் பேரில் கால் டாக்சி ஓட்டுனர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேனாம்பேட்டை ஆலையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கால் டாக்ஸி ஓட்டுனர் நாகராஜ். இவர் தனது மனைவி பிரேமா மற்றும் இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு காரில் புறப்பட்டுச் சென்றுள்ளார். கார் நந்தனம் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள் பிரேமா மற்றும் குழந்தைகளை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சைப்பலனின்றி பிரேமா உயிரிழந்தார்.
கார் தீப்பிடித்து கொண்டிருந்த போது அங்கிருந்து தப்பித்து ஓடிய நாகராஜை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் கார் தானாக தீப்பிடித்து எரிந்ததா? அல்லது நாகராஜ் கொலை செய்ய முயன்றாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
சென்னையில் மனைவி மற்றும் குழந்தைகளை காருக்குள் வைத்து எரித்தாக கால் டாக்சி ஓட்டுனர் கைது
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 08, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 08, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.