Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 7, 2016

சமஸ்கிருதத்தை திணித்தால் அது நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு பேராபத்தை உண்டாக்கும்: கி.வீரமணி



சமஸ்கிருதத்தை திணித்தால் அது நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு பேராபத்தை உண்டாக்கும் என திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
சென்னை பெரியார் திடலில் சமஸ்கிருத திணிப்பு எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் திராவிட தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், எழுத்தாளர் பழ.கருப்பையா, காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தன், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்
டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இதில் பேசிய கி.வீரமணி சமஸ்கிருதத்தை எதிர்ப்பதற்கு நாம் மீண்டும் மொழிப்போருக்கு தயாராக இருக்க வேண்டும் என கூறினார்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.