August 8, 2016
காவல் துறை ஆய்வாளர் தாக்கியதால் இளைஞர் தற்கொலை முயற்சி!
சேலம் அருகே காவல் துறை ஆய்வாளர் கடுமையாக தாக்கியதால், பட்டதாரி இளைஞர் விஷமருந்தி தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே பிரபாகரன் என்ற பொறியியல் பட்டதாரி இளைஞர் நேற்று மாலை தனது கல்லூரி நண்பர்களுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த ஆட்டையாம்பட்டி காவல் ஆய்வாளர் தண்டபாணி தலைமையிலான காவல்துறையினர், அவர்களை நிறுத்தி உள்ளனர்.
ஆனால் பிரபாகரன் சற்று தள்ளி நிறுத்தியதால் காவலர்கள் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பிரபாகரனின் உறவினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி அழைத்துச் சென்றனர். இதனிடையே நண்பர்கள் முன்னிலையில் தம்மையும், தமது தாயாரையும் காவலர்கள் தரக்குறைவாக பேசியதால் மனமுடைந்த பிரபாகரன் விஷமருந்தி தற்கொலை முயற்சி மேற்கொண்டார்.
சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிசிக்கை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே தன்னை தரக்குறைவாக பேசி தாக்கிய காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பிரபாகரன் கடிதம் எழுதிவைத்துள்ளார். இதையடுத்து, காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
காவல் துறை ஆய்வாளர் தாக்கியதால் இளைஞர் தற்கொலை முயற்சி!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 08, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 08, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.