பெரிய பெண் பிள்ளைகளை காமவெறியர்கள் விஷயத்தில் கவனமாக இருந்து பாதுகாப்பாக வளர்க்கும் நாம் , சின்ன பிள்ளைகள் சிறுமிகள் விஷயத்தில் அலட்சியமாக இருந்துவிடுவோம் காரணம் இந்த சிறுமியை யார் தவறான எண்ணத்துடன் பார்க்கபோகின்றார்கள் என்ற நினைப்பில்.
சிறுமிதானே குழந்தைதானே என்று பெரும்பாலானவர்கள் நினைப்பார்கள் என்பதும் உண்மை.
சிறுமியாய் இருந்தாலும் சிறு குழந்தையாய் இருந்தாலும் பெண் என்ற ஒரே சிந்தனையில் நெருங்கும் காமவெறியர்களும் இருக்கவே செய்கின்றார்கள் என்பதும் உண்மை.
அப்படிப்பட்டவர்கள் காமவெறியில் பிள்ளைகளிடம் தவறாக நடக்க முயற்சிப்பார்கள் , தவறாக நடந்தபிறகு பிள்ளை போய் வீட்டில் சொன்னால் மானம் போய்விடுமே கடுமையாக பாதிப்பு ஏற்படுமே என்றெண்ணி அக்குழந்தையை கொலை கூட செய்துவிடுவார்கள் சிலநேரங்களில்.
இது சமீபகாலமாக பல இடங்களில் நடந்தும் வருகின்றது ஆகவே சின்னப்பிள்ளைதானே என்று அலட்சியமாக இருந்துவிடாதீர்கள்
மிகுந்த கவனத்தோடு பாதுகாப்போடு வளருங்கள் இறைவன் உதவியால் .
பிள்ளைகளிடம் நிறைய பேசுங்கள்
ஒருத்தர் தவறாக நடக்க முயற்சித்தால் அங்கு எப்படி நடக்கணும் வீட்டில் சொல்லணும் போன்றவற்றை அழகான முறையில் பிள்ளைகளிடம் எடுத்து கூறுங்கள் .


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.