August 14, 2016
வானொலியில் தமிழ் செய்திகளை நிறுத்தும் முடிவை மத்திய அரசு கைவிடவேண்டும் - ராமதாஸ்
டெல்லி, திருச்சி வானொலி நிலையங்களில் இருந்து ஒலிபரப்படும் தமிழ் செய்திகளை நிறுத்தும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆட்குறைப்பு என்ற பெயரில் மிகவும் அநியாயமான முடிவை மத்திய செய்தி ஒலிபரப்பு அமைச்சகம் எடுத்திருக்கிறது என்று ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லி, திருச்சி ஆகிய வானொலி நிலையங்களில் இருந்து ஒலிபரப்பாகும் தமிழ் செய்திகளை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது என்று தெரிவித்துள்ள அவர், மத்திய ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் துறைகளின் பல கிளை அலுவலகங்களை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.
சில வானொலி நிலையங்களின் செய்தி பிரிவுகளில் பணியாற்றி வந்த செய்தித்துறை அதிகாரிகள் இந்தியாவின் பல பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ராமதாஸ், தற்போது மத்திய அரசு எடுத்துள்ள முடிவை கைவிட்டு, பழைய நிலையே தொடரும் என அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், பத்திரிகை தகவல் அலுவலக மதுரைக்கிளை, செய்தித்தாள் பதிவாளர் அலுவலகத்தின் சென்னை கிளை ஆகியவற்றை மூடும் முடிவையும் மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
வானொலியில் தமிழ் செய்திகளை நிறுத்தும் முடிவை மத்திய அரசு கைவிடவேண்டும் - ராமதாஸ்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 14, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 14, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.