Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 4, 2016

குடும்ப அட்டை இல்லாமல் ரேஷன் பொருள்



குடும்ப அட்டை இல்லாமல் ரேஷன் பொருள்

குடும்ப அட்டை இல்லாமலே ரேஷன் பொருட்கள் பெறும் வசதி கடலூர் மாவட்டத்தில் செப்டம்பர் மாதத்தில் நடைமுறைக்கு வரும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் குடும்ப அட்டைகள் ஸ்மார்ட் அட்டைகளாக மாற்றி வழங்கப்படுமென மாநில அரசு அறிவித்துள்ளது. இதற்கான பணிகள் 2015ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக குடும்ப அட்டைகளில் உள்ள விவரங்களுடன், அட்டைதாரரின் செல்லிடப்பேசி எண், ஆதார் எண், குடும்ப அட்டையிலுள்ள அனைத்து உறுப்பினர்களின் ஆதார் எண் ஆகியவை விற்பனை நிலையத்தில் சிறிய இயந்திரத்தில் பதிவு செய்யப்படுகிறது.
இத்திட்டமானது திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் முன்மாதிரி திட்டமாக செயல்படுத்தப்பட்டு அங்குள்ள அனைத்து அட்டைகளின் விவரமும் இந்த இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக கடலூர், விழுப்புரம் உள்பட 13 மாவட்டங்களில் இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் அடுத்தகட்ட செயல்பாடு குறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் எஸ்.தங்கவேல் கூறியதாவது:
2ஆம் கட்டமாக மாவட்டத்திலுள்ள 1,414 நியாய விலைக் கடைகளின் விற்பனையாளர்கள், எடையாளர்களுக்கு அடுத்த வாரங்களில் 5 வட்டங்களில் தனித்தனியாக பயிற்சி நடத்தப்படுகிறது. பயிற்சியின் போதே விற்பனையாளர்களுக்கு இந்த இயந்திரம் வழங்கப்படும். அதில் குடும்ப அட்டைதாரர்களின் விவரம் பதிவு செய்யப்படும். ஒரு மாதத்துக்குள் மாவட்டத்தல் உள்ள 7.04 லட்சம் குடும்ப அட்டைதாரர்களின் விவரங்களும் பதிவு செய்யப்படும்.
குடும்ப அட்டைதாரர்கள் தங்களது செல்லிடப்பேசி எண், ஆதார் எண் ஆகியவற்றை கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும். இணைக்கப்பட்ட செல்லிடப்பேசி எண்ணுக்கு, நியாய விலைக் கடைக்கு வந்துள்ள பொருள்கள், அவற்றின் இருப்பு விவரங்கள் குறுந்தகவலாக அனுப்பப்படும். அந்த தகவலை எடுத்து வந்தாலே பொருட்கள் வழங்கப்படும். செல்லிடப்பேசி இல்லாமல் ஆதார் எண் மட்டுமே வழங்கியவர்கள் தங்களது விரல் ரேகைப் பதிவினை பதிவு செய்தால் அவர்களுக்கான பொருட்கள் வழங்கும் வகையில் இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒரு அட்டைதாரரின் விவரம் பதிவு செய்யப்பட்டாலே அவர் அடுத்தமுறை கடைக்கு வரும் போது செல்லிடப்பேசியை எடுத்து வந்தாலே போதுமானது. அதன்பின்னர் செப்டம்பர் மாதம் முதல் விற்பனை நிலையம் இயந்திரம் மூலமாக, குடும்ப அட்டை இல்லாமல் பொருள்களை பெற்றுச்செல்லும் முறை நடைமுறைக்கு கொண்டு வரப்படும்.
எனவே பொதுமக்கள் தங்களது செல்லிடப்பேசி எண், ஆதார் எண் ஆகியவற்றை கண்டிப்பாக நியாய விலைக் கடை விற்பனையாளரிடம் அளிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.