August 31, 2016
கொழும்பினூடான மனித கடத்தலை கட்டுப்படுத்த உதவி கோரும் நேபாளம்!
கொழும்பினூடான மனித கடத்தலை கட்டுப்படுத்த உதவி கோரும் நேபாளம்!நேபாளத்தில் உள்ள பெண்களை கடத்துவதை தடை செய்ய இலங்கை ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என நேபாளம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பின் ஊடாக சட்டவிரோதமாக மனித கடத்தலை தடுப்பதற்கு இலங்கை பொலிஸார் ஒத்துழைப்பபை வழங்க வெண்டும் என நேபாளத்தின் சிரேஸ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் Sarbendra Khanal தெரிவித்துள்ளார்.
கொழும்பில் 22 பெண்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக நேபாள பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே கடந்த ஜூன் மாதத்தில் இருந்து தாம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நேபாளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேபாளம் பெண்களை கடத்துவதற்கு பயன்படுத்தப்படும் காத்மண்டு - டெல்லி மற்றும் மும்பை - கொழும்பு ஆகிய பாதைகள் தற்போது அம்பலமாகியுள்ளதாக அந்நாட்டு பொலிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கைக்கு கடத்தப்பட்ட நேபாள பெண்களை இலங்கை பொலிஸாரின் உதவியுடன் மீட்டுள்ளதாக நேபாள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
நேபாள பெண் தொழிலாளர்களை பெரும்பாலும் மலேஷியா மற்றும் பிற நாடுகளுக்கு நாட்டியக்காரர்களாக, பணிபெண்களாகவே வேலைக்கு அமர்த்த கடத்தி செல்லப்படுகின்றார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து ஆகஸ்ட் முதல் வாரத்தில் கிட்டத்தட்ட 19 பெண்களை மீட்டுள்ளதாகவும் நேபாளத்தின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கொழும்பினூடான மனித கடத்தலை கட்டுப்படுத்த உதவி கோரும் நேபாளம்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 31, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 31, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.