Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 6, 2016

முன்னாள் குற்றப் பரம்பரையினர் கொடூரமானவர்கள்:- கிரண் பேடி


கி.பி. 1871 இல் ஆங்கிலேய இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளிலும் பஞ்சாப் மாகாணங்களிலும் நாடோடிக் கூட்டமாக இடம் விட்டு இடம் மாறி மாறி திருட்டு, கொள்ளை போன்ற செயல்களைப் பரம்பரையாக செய்துகொண்டிருந்த மக்களை அடக்குவதற்காக ஆங்கிலேயர்களால் இச்சட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்தியா முழுவதிலும் சுமார் 213 சாதிகளை குற்றப் பழங்குடியினர் பட்டியலில் பிரிட்டிஷ் அரசு இணைத் திருந்தது. தமிழ்நாட்டில் முக்குலத்தோராகிய கள்ளர், மறவர், அகமுடையர் மட்டுமே குற்றப்பரம்பரைச் சட்டப்படி கொடுமைப்படுத்தப்பட்டனர் என்று ஒரு தவறான கருத்து அனைத்து மட்டங்க ளிலும் உள்ளது. உண்மையில் தமிழ்நாட்டில் 89 சாதிகள் இப்பட்டியலில் இருந்தன.

1947 இல் ஏப்ரல் மாதம் சென்னை மாகாண உள்துறை அமைச்சராக இருந்த பெரியாரின் தொண்டரும், சுயமரியாதை இயக்கத் தலைவர்களில் ஒருவருமான டாக்டர் பி. சுப்பராயன் தான் இந்தக் கொடிய சட்டத்தை ஒழிக்கும் சட்டமுன் வடிவை ஆளுநரிடம் சமர்பித்து அவரது ஒப்புதலுக்குப்பின் 1947 ஜூன் 5 ஆம் நாளில் இச்சட்டத்தை ஒழிந்தது.

பாண்டிச்சேரியின் துணை நிலை ஆளுநரான கிரண் பேடி, தனது ட்விட்டர் பக்கத்தில், குற்றப் பரம்பரையினர் கொடூரமானவர்கள், தொழில்முறைக் குற்றவாளிகள் அவர்கள். அரிதாகத்தான் அவர்கள் கைது செய்யப்பட்டும், தண்டனை அளிக்கப்பட்டும் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு, பிறப்பின் ரீதியில் அவர்களை கீழ்மைப்படுத்தும் விதமான கருத்துக்களைக் கொண்டிருப்பதாகவும், ஒரு உயர்ந்த பதவியில் இருக்கும் பொறுப்புள்ளவர் இத்தகைய வாக்கியங்களை உதிர்ப்பது கண்டிக்கத்தக்கது என சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக கண்டனக் குரல்கள் எழுப்பப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.