August 9, 2016
பிலாலுக்கும் சசிகலா புஷ்பா மனைவிதான்: இரண்டு கணவர்களுடன் வாழ்ந்ததாக குற்றச்சாட்டு
பிலாலுக்கும் சசிகலா புஷ்பா மனைவிதான்: இரண்டு கணவர்களுடன் வாழ்ந்ததாக குற்றச்சாட்டுஅதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா தன்னை திருமணம் செய்துகொண்டதாக போயஸ் கார்டனில் வேலை பார்த்துவந்த பிலால் என்பவர் கூறியதாக தகவல்கள் வந்தன.
இந்த செய்தியை உறுதிபடுத்தும் விதமாக சசிகலா புஷ்பா மீது தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்துவிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இரண்டு இளம்பெண்கள் சசிகலா புஷ்பா மற்றும் பிலால் விவகாரம் குறித்து பேசியுள்ளனர்.
சசிகலா புஷ்பா தங்களை துன்புறுத்தியது, நிர்வாணமாக படுத்துக்கொண்டு கை, கால்களை அமுக்கி விட சொல்வது, அவரது கணவர் மற்றும் மகன் பாலியல் ரீதியாக துன்புறுத்தியது என பல புகார்களை அவர்கள் கூறினார்.
இதில் பிலால், சசிகலா உறவை பற்றி கூறிய அவர்கள், சசிகலா புஷ்பாவுக்கு பிலால் தாலி கட்டினது உண்மைதான் என்றனர். மேலும், சசிகலா புஷ்பா, பிலால் சேர்ந்து தான் இருப்பாங்க. இதைப்பற்றி சசிகலாவின் முதல் கணவரான லிங்கேஸ்வரன் கேட்டால், இது என் தனிப்பட்ட விவகாரம்னு சசிகலா புஷ்பா கூறுவார்.
சசிகலா புஷ்பாவுடன் சேர்ந்து பிலாலும் தங்களை கொடுமை படுத்தியதாக கூறிய அவர்கள், நாங்க அப்பதான் தூங்க சொல்வோம், உடனே பிலால் வந்து, எங்களை எழுப்பி விட்டு போய் அக்காவுக்கு கை, கால் அமுக்கி விடுங்கனு சொல்வாறு என அடுக்கடுக்காக பல புகார்களை அந்த இளம் பெண்கள் கூறினர்
பிலாலுக்கும் சசிகலா புஷ்பா மனைவிதான்: இரண்டு கணவர்களுடன் வாழ்ந்ததாக குற்றச்சாட்டு
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 09, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 09, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.