Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 23, 2016

குஜராத்தில் நிருபருக்கு ஏற்பட்ட கதி.. பத்திரிகை அலுவலகத்திலேயே கத்தியால் குத்திக் கொலை!



ஜூனாகத்: குஜராத்தில் உள்ள தினசரி பத்திரிகை ஒன்றில் பணிபுரிந்து வந்த நிருபர், அவர் பணி புரிந்து வந்த பத்திரிகை அலுவலகத்திலேயே கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். ஒரு நிருபர், பத்திரிக்கை அலுவலகத்திலேயே கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலம் ஜுனாகத் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஜெய்ஹிந் சமாச்சார் என்ற பத்திரிகையில் கிஷோர் தேவ் என்ற நிருபர் வேலை பார்த்து வந்தார். பத்திரிகை அலுவலகத்தில் இருந்த அவரை யாரோ சிலர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.
அப்போது அலுவலகத்தில் யாரும் இல்லை என்று சொல்லப்படுகிறது.

வீட்டிற்கு கிஷோர் தேவ் திரும்பாததால் அவரின் வீட்டில் இருந்து போலீசாருக்கு புகார் கொடுக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து எஸ்பி நிலேஷ் ஜஜடியா, கிஷோர் தேவ் கூர்மையான கத்தியால் 6 இடங்களில் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்றும் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.