August 24, 2016
டி.எஸ்.பி விஷ்ணுபிரியா மரண வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு எதிர்ப்பு
டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா மரண வழக்கை சிபிஐ விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த அவர், காவல்துறை உயரதிகாரிகள் கொடுத்த நெருக்கடி காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதன்பின்னர், டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கோடு, கோகுல்ராஜ் கொலை வழக்கும் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. சிபிசிஐடி எஸ்.பி நாகஜோதி தலைமையில் இவ்விரு வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடக் கோரி விஷ்ணுபிரியாவின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஜூலை ஒன்றாம் தேதி விஷ்ணுபிரியா வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், விஷ்ணுபிரியா வழக்கை காரணமின்றி சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐ-க்கு மாற்றியுள்ளதாக கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிசிஐடி விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சிபிஐ-க்கு மாற்றியதற்கான காரணத்தை சென்னை உயர்நீதிமன்றம் கூற வேண்டும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
டி.எஸ்.பி விஷ்ணுபிரியா மரண வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு எதிர்ப்பு
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 24, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 24, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.