Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 24, 2016

நெல்லை அருகே இருதரப்பினரிடையே நடந்த மோதலால் பதற்றம்!



திருநெல்வேலி மாவட்டம் முனைஞ்சிப்பட்டியில், இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலால் வீடுகள் சூறையாடப்பட்டன. இதனால் பதற்றம் நிலவியதை அடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லையில் இருந்த தனியார் நிதி நிறுவனத்தில் முனைஞ்சிபட்டியைச் சேர்ந்த பார்வதி என்பவர் ஏஜெண்ட்-ஆக பணியாற்றியபோது, இந்தப் பகுதியைச் சேர்ந்த சிலரிடம் மாதம் 600 ரூபாய் வீதம் 5 ஆண்டுகள் வசூலித்தார். இதனிடையே, கடந்த ஆண்டு அந்த நிதி நிறுவனம் மூடப்பட்டது.

இதனால், தாங்கள் கட்டிய பணத்தை திருப்பிக்கேட்டு கடந்த 19-ஆம் தேதி சுப்பையா என்பவரின் உறவினர்கள் சிலர், பார்வதியையும் அவரது தாயாரையும் தாக்கியதாக பால்பாண்டி என்பவர் கைது செய்யப்பட்டார்.

சுப்பையா தரப்பினர் அளித்த புகாரின்பேரில் பணமோசடி வழக்கில் பார்வதியின் தாயார் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், ஆத்திரமடைந்த இருதரப்பினரும் மாறி மாறி வீடுகளை அடித்து நொறுக்கினர்.

இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவியதால் போலீசார் குவிக்கப்பட்டு, இருதரப்பினர் மீதும் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.