August 13, 2016
ரயிலில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்: பாதுகாப்பு போலீசாரிடம் தனித்தனியாக விசாரணை
சேலம் ரயிலில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், பாதுகாப்புக்கு சென்ற 9 போலீசாரிடம் சிபிசிஐடி கண்காணிப்பாளர் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.
சேலத்தில் இருந்து சென்னைக்கு கடந்த 8 ஆம் தேதி இரவு, ரயிலில் கொண்டு செல்லப்பட்ட ரிசர்வ் வங்கிப் பணம் 5 கோடியே 75 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீஸாருக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலத்தில் இருந்து பணப்பெட்டிகளுக்கு பாதுகாப்பாக சென்ற சேலம் மாநகர ஆயுதப்படை உதவி ஆணையர் நாகராஜ் உள்பட 9 போலீசாரிடம் நேற்று முதல் சேலம் மாநகர காவல்துறை துணை ஆணையர்கள் செல்வராஜ், ராம கிருஷ்ணன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து திருநெல்வேலி மாநகர துணை ஆணையர் அமித்குமார் சிங் மற்றும் சிபிசிஐடி கண்காணிப்பாளர் நாகஜோதி ஆகியோர் 9 போலீசாரிடமும் அடுத்தடுத்து, தனித்தனியாக விசாரித்தனர்.
மேலும் பணம் ஏற்றப்பட்ட ரயில்வே செட், ரயில் நிலையம், பார்சல் அலுவலகம், பார்சல் ஏற்றிய சைக்கிள் ஸ்டேண்ட் என பல்வேறு இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
ரயிலில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்: பாதுகாப்பு போலீசாரிடம் தனித்தனியாக விசாரணை
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 13, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 13, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.