August 23, 2016
மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை - ரம்யா
பாகிஸ்தானை புகழ்ந்து பேசியதற்காக நடிகை ரம்யா மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யுமாறு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனினும் பாகிஸ்தான் குறித்த தனது கருத்துக்காக மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், நடிகையுமான ரம்யா, பாகிஸ்தான் ஒரு நல்ல நாடு, நம்மைப் போன்ற மனிதர்கள் தான் அங்கும் வாழ்கிறார்கள் பேட்டி அளித்தார். மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறுவது போல் பாகிஸ்தான் நரகம் அல்ல என்றும் அங்கும் நம்மைப் போன்ற மக்களே வாழ்ந்து வருகிறார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.
இதற்காக வழக்கறிஞர் ஒருவர், ரம்யா மீது புகாரளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் ரம்யா மீது வழக்குப்பதிவு செய்யுமாறு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை வரும் 27-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை ரம்யா, பாகிஸ்தானை புகழ்ந்து பேசியதற்காக மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்
மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை - ரம்யா
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 23, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 23, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.