August 3, 2016
சிறைக் காவலர்களால் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு - பியூஷின் மனுவை ஏற்றது நீதிமன்றம்
சேலம் மத்திய சிறையில் சிறைக்காவலர்களால் தாக்கப்பட்டதாக தொடர்பாக சூழலியல் செயற்பாட்டாளர் பியூஷ் மனுஷ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
சேலம் முள்ளுவாடி கேட் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் மேற்கொள்ள வேண்டி போராட்டம் நடத்திய சூழலியல் செயற்பாட்டாளர் பியூஷ் மனுஷ் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது, அவரை சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் உள்பட காவலர்கள் தாக்கியதாக சேலம் குற்றவியல் நீதிமன்றம் எண் 3ல் கடந்த மாதம் 28ம் தேதி பியூஷ் மனுஷ் புகார் தெரிவித்திருந்தார்.
புகார் மனு இன்றைய தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது புகார் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தெரிவித்த நீதிபதி சண்முகபிரியா, புகாரில் நீதிமன்ற எண், என்ன நடவடிக்கை தேவை என்பது குறித்த விவரங்கள் ஏதும் இல்லாததால், மனுவில் திருத்தங்கள் செய்து ஒரு வாரத்திற்குள் அளிக்க அறிவுரை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பியூஷ் மனுஷ், செந்தில்குமார் சிறையின் கண்காணிப்பாளராக உள்ளதால் இந்த வழக்கில் ஆதாரங்கள் அழிக்கும் வாய்ப்பு ஏற்படும் என்பதால் அவரை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
சிறைக் காவலர்களால் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு - பியூஷின் மனுவை ஏற்றது நீதிமன்றம்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 03, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 03, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.