August 31, 2016
மீண்டும் ஒரு கொடூரம்... புதுவை கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி விட்டு தப்பிய சக மாணவன்!
தமிழகத்தில் ஒருதலைக் காதல் விவகாரங்களால் அடுத்தடுத்து படுகொலைகள் நிகழ்ந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது புதுவையிலும் கல்லூரி மாணவியை உடன் படிக்கும் சக மாணவரே கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, விழுப்புரம், கரூர், தூத்துக்குடி நகரங்களில் அடுத்தடுத்து ஒருதலைக் காதலால் இளம்பெண்கள் வெட்டிப் படுகொலை செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது. தாம் காதலித்துவிட்டேன் என்ற காரணத்தாலேயே அந்த பெண்களை படுகொலை செய்யும் வக்கிரத்துக்கு முடிவே இல்லையா என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டிருக்கிறது இப்படுகொலைகள்..
தற்போது புதுச்சேரி உசுத்தேரியில் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்த மாணவி ஹேனா கத்தியால் குத்தப்பட்டுள்ளார். அவரை கத்தியால் குத்தியது சக மாணவரான எழிலரசன்..
ஹேனாவை கத்தியால் குத்திவிட்டு அவர் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். தொடரும் இத்தகைய சம்பவங்கள் பெண்கள் வெளியே நடமாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
மீண்டும் ஒரு கொடூரம்... புதுவை கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி விட்டு தப்பிய சக மாணவன்!
Reviewed by மறத்தமிழன்
on
August 31, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
August 31, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.