August 30, 2016
ஒரு சிறைவாசியின் உயிரை காப்பாற்றா வேண்டி ஒரு வழக்கறிஞரின் உறுக்கமான கடிதம்......
திருச்சி மத்தியச் சிறையில் விசாரணை சிறைவாசி திலீபன் மகேந்திரன் கொடுமை படுத்தப்படுகிறார் - அவரது உயிருக்கு ஆபத்து- பாதுகாக்க நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர், திருச்சி மாநகர காவல் ஆணையர், சிறைத்துறை கூடுதல் இயக்குனர் ஆகியோர்களுக்கு நான் மின்னஞ்சல் மூலம் அனுப்பிய புகார்:
அனுப்புதல்,
அ.கமருதீன், பி.எஸ்சி., பி.எல்.,
வழக்குரைஞர் / ஒருங்கிணைப்பாளர்,
குடிமக்கள் உரிமைகள் பொதுமன்றம்,
எண். 9, காயிதேமில்லத் தெரு,
காஜா நகர்,
திருச்சிராப்பள்ளி – 620 020.
பெறுதல்,
உயர்திரு சிறைத்துறை கூடுதல் இயக்குனர் அவர்கள்
அய்யா,
நான் மேல்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தொழில் செய்துவருகிறேன். சென்னையில் சுவாதி என்பவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலிசார் உண்மைக் குற்றவாளிகளை தப்பவிட்டுள்ளதாகவும், அது ஒரு ஆணவக் கொலை என்றும் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த பாஜக பிரமுகர் கருப்பு என்கிற முருகானந்தம் என்பவருக்கும் அக்கொலைக்கும் தொடர்பு உள்ளது என்றும் சமூக ஊடகங்களில் பதிவு செய்து பரவலாக்கிய நாகையை சேர்ந்த திலீபன் மகேந்திரன் என்பவரை திருவாரூர் மாவட்ட போலிசார் கைது செய்து திருச்சி மத்தியச் சிறையில் அடைத்துள்ளனர்.
மேற்படி திலீபன் மகேந்திரன் அவர்களுக்கு சட்ட உதவிகள் வழங்குமாறு சில முகநூல் நண்பர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் அவரை கடந்த வெள்ளிக்கிழமை வழக்கறிஞர் தோழர் பொன்.தம்ம பாலா அவர்கள் சந்தித்து வந்தார். நான் கடந்த சனிக்கிழமை (27.08.2016) அன்று சிறையில் சந்தித்து வந்தேன். மீண்டும் இன்று (29.08.2016) மாலை அவரையும் எனது மற்ற சில கட்சிக்காரர்களையும் சிறையில் நேர்காணலில் சந்தித்து பேசினேன். அப்போது திலீபன் மகேந்திரன் அவர்கள் சனிக்கிழமை நான் அவரை சந்தித்து சென்ற பின்னர் தன்னை அதுவரையில் வைத்திருந்த பிளாக்கில் இருந்து மனநிலை சரியில்லாதவர்களை அடைக்கும் மெண்டல் பிளாக்கிற்கு மாற்றி அடைத்து விட்டதாக தெரிவித்தார். மேலும் தன்னுடைய ஆடைகளை கழற்றிக் கொடுக்கச்சொல்லி தண்டனை சிறைவாசிகள் அணியும் டவுசரை மட்டும் அணிய கட்டாயப்படுத்தி கொடுத்துள்ளதாகவும், உணவு நேரம் போக மற்ற நேரங்கள் முழுவதும் 24 மணிநேரமும் தன்னை தனிமைச் சிறையில் சிறை வைத்திருப்பதாகவும், மேற்படி அறையில் மின்விசிறி, மின்விளக்கு எதுவும் இல்லை என்றும், இரவில் போர்த்திக் கொள்ள போர்வை கூட தரவில்லை என்றும் அதனால் இரண்டு நாட்களாக இரவில் கடும் கொசுக் கடியிலும், காற்றும், வெளிச்சமும் இன்றி தவிப்பதாக தெரிவித்தார். தற்போது என்னை சந்திக்க வரும்போதுதான் தனது உடைகளை கொடுத்ததாகவும், அதனையும் மீண்டும் கொடுத்துவிட்டு தான் பிளாக்கிற்கு செல்ல வேண்டும் என காவலர்கள் மிரட்டியதாகவும், தான் என்ற குற்றமும் செய்யாத நிலையில் சிறை அதிகாரிகளின் இந்த கொடுமை தனக்கு அதிர்ச்சியையும், அச்சத்தையும், சந்தேகத்தையும் ஏற்ப்படுத்துவதாக தெரிவித்தார்.
நான் உடன் அங்கு பணியில் சிறை அலுவலரிடம் ஏன் இவ்வாறு இவரை நடத்துகிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் சிறை மனநல ஆலோசகரின் அறிக்கையின் பேரிலும், திலீபனின் பாதுகாப்புக்காகவும் இவ்வாறு அவரை அடைத்து வைத்திருப்பதாக தெரிவித்தார். நான் மனநல ஆலோசகரின் அறிக்கையை எனக்கு காட்டுங்கள் நான் படிக்க வேண்டும் என்று கேட்டதற்கு மறுத்து விட்டார்கள். மேலும் சிறை கண்காணிப்பாளர் அவர்களை இது சம்பந்தமாக சந்திக்க நான் அனுமதி கேட்டும் அதற்கும் அனுமதி மறுத்து விட்டனர். நேரமாகி விட்டது என்று கூறி திலீபனையும் அழைத்து சென்று என்னையும் வெளியே செல்ல சொல்லிவிட்டனர்.
சிறை அதிகாரிகளின் இச்செய்கைகள் எனக்கு பெரும் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. திலீபன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து சிறையிலிருந்து திலீபன் உயிரோடு வந்துவிடுவனா என சில காவித்துவ நபர்கள் முகநூளில் பதிவிட்டு வருகின்றனர். அப்படிப்பட்ட சூழலில் சிறையில் சிறையில் திலீபனை உயர் பாதுகாப்பு பிளாக்கிற்கு மாற்றி அவருக்கு பாதுகாப்பை அதிகரிப்பதற்கு பதிலாக அவர் எதோ மனநிலை சரியில்லாதவர் போல சிறை மனநல ஆலோசகரிடம் அறிக்கை பெற்றுள்ளதாகவும், அதன் பேரில் தற்கொலைக்கு முயச்சிப்பவர்களை சிறையில் அடைத்து வைக்கும் முறையில் அடைத்து வைத்துள்ளதாகவும் சிறை அதிகாரிகள் கூறி, செயல்பட்டு வருவது சிறை அதிகாரிகளால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவே உறுதியாகிறது.
ஆகவே மேற்படி திருச்சி மத்தியச் சிறையில் விசாரணை சிறைவாசியாக இருக்கும் திலீபன் மகேந்திரன் அவர்களின் உயிருக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும், சிறையில் வேறு பிளாக்கிற்கு மாற்றி விசாரணை சிறைவாசிகளுக்கு உரிய சுதந்திரம் கொடுக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். மேலும் அவரை சட்ட விரோதமாக தனிமைச் சிறையில், டவுசருடன் 24 மணிநேரமும் மின்விசிறி, மின்விளக்கு இன்றி போர்வை கூட தராமல் அடைத்து வைத்து கொடுமை செய்தது குறித்து உரிய விசாரணை நடத்தி தவறிழைத்த சிறை அதிகாரிகள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமாய் கேட்டுகொள்கிறேன்.
இப்படிக்கு,
அ.கமருதீன்,
வழக்குரைஞர் / ஒருங்கிணைப்பாளர்,
குடிமக்கள் உரிமைகள் பொதுமன்றம்
Email- k4kamar@gmail.com
நன்றி Kamaru Deen
ஒரு சிறைவாசியின் உயிரை காப்பாற்றா வேண்டி ஒரு வழக்கறிஞரின் உறுக்கமான கடிதம்......
Reviewed by மறத்தமிழன்
on
August 30, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
August 30, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.