August 23, 2016
நடிகையும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரம்யா மீது தேசத்துரோக வழக்குப் பதிய மனு
பிரபல நடிகையும், காங்கிரஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரம்யா மீது தேச துரோக வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு கர்நாடகாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரபல நடிகையும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரம்யா, பாகிஸ்தானுக்கு செல்வது நரகத்திற்கு செல்வது போன்றது என மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்த கருத்து தவறானது என்று கூறியிருந்தார். மேலும், பாகிஸ்தான் சிறந்த நாடு என்றும், அங்குள்ள மக்கள் சிறப்பானவர்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரம்யா மீது குடகு நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார். நடிகை ரம்யா மீது தேசதுரோக வழக்கு மற்றும் அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை குடகு நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்று கொண்டுள்ளது. வரும் 27ம் தேதியன்று மனு மீது விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகையும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரம்யா மீது தேசத்துரோக வழக்குப் பதிய மனு
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 23, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 23, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.