Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 8, 2016

நெல்லை மாவட்டத்தில் முடங்கும் நிலையில் பாய் நெசவுத் தொழில்



கோரைப்புற்கள் பற்றாக்குறையால் அம்பாசமுத்திரம் அருகே பாய் நெசவுத் தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பொட்டல்புதூர் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கோரைப் பாய் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவிரி டெல்டா ஆற்றுப் படுகைகளில் அதிகளவில் கோரைப்புற்கள் பயிரிடப்பட்டு வெளி மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், அப்பகுதிகளில் கோரைப் புற்களின் உற்பத்தி தற்போது குறைந்துள்ளது.
இதனால் பொட்டல்புதூர் பகுதி மக்கள் பாய் நெசவுத் தொழிலில் தொடர்ந்து ஈடுபட முடியாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, அம்பாசமுத்திரம் பகுதியிலேயே கோரைப்புற்கள் விளைவிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரைப் பாய் நெசவுத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.