Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 14, 2016

லாரி மோதிய விபத்தில் இரண்டு பேர் பலி!



கரூர் அருகே மாட்டு வண்டி மீது லாரி மோதிய விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கரூர் அருகேயுள்ள கொடையூரைச் சேர்ந்த அருள், பூபதி ஆகியோர் அமராவதி ஆற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் அள்ளிக்கொண்டு கரூர், சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மதுரையில் இருந்து கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி எதிர்பாராதவிதமாக மாட்டு வண்டி மீது மோதியது, இதில் மாட்டு வண்டியில் பயணம் செய்த அருள், பூபதி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், வண்டி மாடுகள் இரண்டும் விபத்தில் பலியாகின. சம்பவ இடத்திற்கு வந்த பசுபதிபாளையம் போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  தப்பியோடிய லாரியின் ஓட்டுனரை தேடி வருகின்றனர்.
  

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.