Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 2, 2016

மீண்டும் கிளம்பியது காம லீலைகள் ஆடிய நித்தியானந்தரின் சர்ச்சை



நித்தியாநந்தா ரஞ்சிதா நடத்திய காம லீலைகள் காணொளியாக ஊடகங்களில் வெளியிடப்பட்ட போது அதை பார்காதவர்களே கிடையாது என்றால் அது மிகையாகாது.
மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீன நியமனத்தை ரத்து செய்யக் கோரி காம காம லீலைகள் ஆடிய நித்யானந்தர் சார்பில் மதுரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மதுரை ஆதீனம், இளைய ஆதீனம் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2012 ம் ஆண்டு ஏப்ரலில் மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தரை, மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் நியமனம் செய்துள்ளதாக அறிவித்தார். அதன் பின்னர் பல்வேறு அமைப்பினர் நித்தியானவுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர் .

இந்த நிலையில் கருத்துவேறுபாடு காரணமாக நித்யானந்தரை இளைய ஆதீனமாக நியமித்ததை அதே ஆண்டு மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் ரத்து  செய்ததாக அறிவித்தார்
அதன் பின்னர் கடந்த 2012 ம் ஆண்டு இளைய ஆதீனமாக  சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரை அருணகிரிநாதர் நியமனம் செய்ததாக அறிவித்தார் .

அருணகிரிநாதர் இளைய ஆதீனமாக செய்ததை காம லீலைகள் ஆடிய  நித்தியானந்தர்
 ரத்து செய்ய வேண்டும் என்று நித்யானந்தர் மதுரை முதன்மை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்
அதில், மதுரை ஆதீனத்தைப் பொருத்தவரை இளைய ஆதீனமாக ஒருவரை மட்டுமே நியமிக்க அதிகாரம் உள்ளது. தன்னிச்சையாக நீக்கும் அதிகாரம் ஆதீனத்துக்கு இல்லை. என்னை இளைய ஆதீனமாக நியமித்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடுக்கப்பட்ட வழக்கில் மதுரை ஆதீனம் பதில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதன் பின்னர் என்னை இளைய ஆதீனமாக நியமித்து அருணகிரிநாதர் பிறப்பித்த அங்கீகாரம் செல்லாது என்று அறிவிக்கக்கோரி, அவர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. அதன் காரணமாக திருநாவுக்கரசை இளைய ஆதீனமாக நியமித்தது செல்லாது என்று உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அந்த மனு மீதான விசாரணை 29-07-2016 அன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது .
அதனை விசாரித்த நீதிபதி, வழக்கு சம்பந்தமாக மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மற்றும் இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டுள்ள திருநாவுக்கரசு ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்


நன்றி
NeWS TIG

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.