Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 9, 2016

ஆன்லைன் வர்த்தகம் செய்வதாக பெண்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி!



மதுரை அருகே ஆன்லைன் வர்த்தகம் செய்வதாக கூறி ஏராளமான பெண்களை ஏமாற்றி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த இளைஞரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
     
மதுரை மாவட்டம் சேடப்பட்டியை சேர்ந்த இளம்பெண் லதா, திருமங்கலம் நகரில் கடையில் வேலை செய்து வருகிறார். இவரிடம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ஆன்லைன் தொழில் செய்வதாக கூறி பழகியுள்ளார். மேலும் விலை உயர்ந்த மொபைல் மற்றும் பொருட்களை மிக குறைந்த விலைக்கு வாங்கி அதிக லாபத்திற்கு விற்கலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதனை நம்பி பல ஆயிரம் ரூபாயை லதா கொடுத்த பின்னர், அவரை ஏமாற்றிய இளைஞர் தப்பியோடிவிட்டார். இந்த மோசடி தொடர்பாக லதா கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அந்த மோசடி நபர், ஆன்லைன் வர்த்தகம் செய்வதாக கூறி ஏராளமான பெண்களை ஏமாற்றி பல லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரிய வந்தது. மேலும் சில பெண்களை காதலித்து ஏமாற்றியதாகவும் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, தனிப்படை அமைத்து போலீசார் மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.