August 13, 2016
ராம்குமாரை சிறையில் வீடியோ பதிவுசெய்த போலீசார்!
ராம்குமாரை சிறையில் வீடியோ பதிவுசெய்த போலீசார்!
மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட ராம்குமாரை, சிறையில் வீடியோ எடுக்க, சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து, இன்று புழல் மத்திய சிறையில் காவல்துறையினரால் வீடியோ பதிவுசெய்யப்பட்டது.
சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், கடந்த ஜூன் மாதம் 24 ஆம் தேதி, மென்பொறியாளர் சுவாதி வெட்டி கொல்லப்பட்டார். இந்த படுகொலை தொடர்பாக சிசிடிவி காட்சிகளை வைத்து, போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ராம்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்வதற்கு முன், கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
தற்போது, அந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த உருவம், ராம்குமார் தானா? என்பதை கண்டுபிடிக்க, ராம்குமாரை வீடியோ எடுக்க அனுமதி கேட்டு, எழும்பூர் நீதிமன்றத்தில், போலீஸ் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
அதன்படி, நுங்கம்பாக்கம் உதவி ஆணையாளரும், புலனாய்வு அதிகாரியுமான தேவராஜ் தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழு, புழல் மத்திய சிறையில் உள்ள ராம்குமாரை இன்று காலை வீடியோ பதிவு செய்தது.
ராம்குமாரை நடக்க சொல்லியும், உட்காரச் சொல்லியும் வீடியோ எடுக்கப்பட்டது. தற்போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவினையும், ஏற்கெனவே சுவாதி கொலை நடந்த பகுதியில் பதிவாகியுள்ள சிசிடிவி பதிவையும் ஒப்பிட்டு விசாரணை நடத்தப்படவுள்ளது.
ராம்குமாரை சிறையில் வீடியோ பதிவுசெய்த போலீசார்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 13, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 13, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.