Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 27, 2016

கொள்ளையடித்துவிட்டு வீட்டிலுள்ளவர்களை வன்புணர்வு செய்து கொலை செய்த கொடூரர்கள்!


ஹரியானா அருகே தம்பதியினரை கொன்றுவிட்டு இரண்டு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த கொள்ளையர்கள், பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் மீவட் என்ற பகுதியில் வீட்டின் உள்ளே புகுந்த கொள்ளையர்கள் சிலர், வீட்டில் இருந்தவர்களை கட்டிபோட்டுவிட்டு கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். பின்னர் அங்கிருந்த பெண் ஒருவரையும் மற்றும் சிறுமியையும் தோட்டத்திற்குள் தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

மேலும், வீட்டில் இருந்த தம்பதியினரை கொன்றுவிட்டு, நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.