Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 3, 2016

குஜராத் முதலமைச்சர் ஆனந்திபென் படேலின் ராஜினாமாவை ஏற்றது பாஜக ஆட்சிமன்றக் குழு!



குஜராத் முதலமைச்சர் ஆனந்திபென் படேலின் ராஜினாமாவை பாஜக ஆட்சிமன்றக் குழு ஏற்றுள்ளது.

இந்தக் கூட்டத்தில், ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேற்றம், குஜராத் முதலமைச்சர் ஆனந்தி பென் படேல் பதவி விலகல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. இதில், ஆனந்திபென் படேலின் பதவி விலகலை ஏற்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வெங்கய்யா நாயுடு தெரிவித்தார்.

இதனிடையே, குஜராத் முதலமைச்சராக யாரை நியமிப்பது என்பது குறித்தும் பாஜக ஆட்சிமன்றக் குழுவில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. குஜராத் அமைச்சர் நிதின் படேல் அல்லது குஜராத் மாநில பாஜக தலைவர் விஜய் ரூபாணி ஆகியோரில் ஒருவர் முதலமைச்சராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.