Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 16, 2016

ஜெயலலிதாவை வீழ்த்த சுப்ரமணிய சுவாமியுடன் கை கோர்த்தார சசிகலா புஸ்பா !!??


ஜெயலலிதாவை  வீழ்த்த சுப்ரமணிய சுவாமியுடன்  சசிகலா புஸ்பா இணைந்து செயற்படுவதாக செய்திகள்  பரவியுள்ளன. தமிழக முதல்வரை துணிவுடன் எதிர்க்க துணிந்தவர் சுப்ரமணிய சுவாமி மட்டுமே என்ற  எண்ணத்திலேயே சசிகலா புஸ்பா இவ்வாறான  முடிவினை எடுத்துள்ளதாகவும் அறிய முடிகின்றது.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்துக் கொண்டிருக்கும் அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட சசிகலா புஷ்பா தற்போது பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமியின் ஆலோசனைகளை கேட்டு வருவதாக டெல்லி தகவல்கள் கூறுகின்றன. அதிமுகவின் ராஜ்யசபா எம்.பி.யாக டெல்லிக்குப் போன சசிகலா புஷ்பா பல்வேறு கட்சித் தலைவர்களை சந்தித்து தமக்கான ஒரு லாபியை உருவாக்கிக் கொண்டார்.

அப்படித்தான் திமுக எம்பியான திருச்சி சிவாவுடன் நெருக்கமாக இருந்திருக்கிறார் சசிகலா புஷ்பா. இருவருக்குமான பணப் பரிமாற்றத்தில் பஞ்சாயத்து நடக்க அதுதான் டெல்லி விமான நிலையத்தில் பகிரங்க மோதலானாதாகவும் கூறப்படுகிறது. சிவாவை டெல்லி விமான நிலையத்தில் சசிகலா புஷ்பா தாக்கியது குறித்து ஜெயலலிதா போயஸ் தோட்டத்தில் விசாரணை நடத்தி பதவியை ராஜினாமா செய்ய உத்தரவிட்டார்.ஆனால் ஜெயலலிதாவின் உத்தரவை மதிக்காமல் அவர் தம்மை அடித்ததாக ராஜ்யசபாவில் பகிரங்கமாக புகார் கூறினார். அப்போது திமுகவின் கனிமொழி, காங்கிரசின் குலாம்நபி ஆசாத் ஆகியோர் சசிகலா புஷ்பாவை ஆதரித்து பேசினர்.

இந்த நிலையில் தமிழகத்தில் சசிகலா புஷ்பா மீது அடுத்தடுத்து புகார்கள் வர வழக்குகளும் பதியப்பட்டன. இதனால் முன்ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் சசிகலா புஷ்பா.

இம்மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் வரும் 22-ந் தேதி வரை சசிகலா புஷ்பாவ கைது செய்ய இடைக்காலத் தடை விதித்தது. இதனிடையே டெல்லியிலும் தமிழகத்திலும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களை தொடர்பு கொண்டு தமக்கு ஆதரவு தருமாறு சசிகலா புஷ்பா கேட்டு வருகிறார்.

பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமியின் ஆலோசனைப்படிதான் இப்படியான ஆதரவை கோரி வருகிறாராம் சசிகலா புஷ்பா. சசிகலா புஷ்பாவை பயன்படுத்தி ஜெயலலிதாவுக்கு எதிரான பிரசாரத்தை ஊதி பெருக்குவது என்பதுதான் சுப்பிரமணியன் சுவாமியின் திட்டமாம்… சசிகலா புஷ்பாவும் சுப்பிரமணியன் சுவாமியின் ஆதரவு தமக்கு பெரும் பலம் என நம்புகிறாராம். இதனால் சு.சுவாமியின் ஆலோசனைகளை ஒரு சிஷ்யை போல பணிவோடு ஏற்று ஜெயலலிதாவுக்கு எதிரான தீவிரமாக இறங்க முடிவு செய்துள்ளாராம் சசிகலா புஷ்பா.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.