August 24, 2016
லாரியில் இருந்து கொட்டப்பட்ட மண்ணில் புதைந்து இளைஞர் பலி!
ஓசூர் அருகே லாரியில் இருந்து கொட்டப்பட்ட மண்ணில் புதைந்து இளைஞர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம், திம்மிடிஜோலா பகுதியை சேர்ந்த சங்கர், ஓசூர் அருகே உள்ள மல்லசந்திரம் செங்கல் சூளையில், லோடுமேனாக வேலை செய்து வந்தார். நேற்று நள்ளிரவு, 2 மணியளவில், செங்கல்சூளைக்கு களிமண் ஏற்றி வந்த டிப்பர் லாரி, பின்புறமாக நின்று கொண்டிருந்த சங்கர் மீது, எதிர்பாராத விதமாக மோதியது.
இதில், லாரியில் இருந்த களிமண் முழுவதும் சங்கர் மீது விழுந்ததில் மண்ணில் சிக்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த காவல்துறையினர், சடலத்தை மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநரை கைது செய்தனர்
லாரியில் இருந்து கொட்டப்பட்ட மண்ணில் புதைந்து இளைஞர் பலி!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 24, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 24, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.