Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 21, 2016

மனைவியை நண்பனுடன் படுக்க வைத்தவனின் நிலை..?



தனது மனைவியை பயமுறுத்தி தனது நண்பன் மூலம் பாலியல் துஸ்பிரயோகப்படுத்திய நபருக்கு 22 வருட சிறைத்தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் தனது மனைவியை ஆயுதங்களை காட்டி பயமுறுத்தி தனது நண்பணுடன் உறவுகொள்ள செய்துள்ளார்.
இதுதொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் கேகாலை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்தமைக்கு அமைவாக அவரது கணவனும்,நண்பனும் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
இது தொடர்பான விசாரணையானது நேற்று முன்தினம் கேகாலை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.
இதன்போது குறித்த கணவனுக்கும் இவரது நண்பணுக்கும் முதலாவது குற்றச்சாட்டுக்காக 12 வருட சிறைத்தண்டணையும்,இரண்டாவது குற்றச்சாட்டுக்காக 10 வருட சிறைத்தண்டனையும் நீதிவானால் வழங்கப்படுவதாக உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன் 25,000 ரூபாய் தண்டப்பணமும் அறவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட குறித்த பெண்ணுக்கு சந்தேகநபர்கள் இருவரும் 3 இலட்சம் இழப்பீட்டு தொகையும் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, குறித்த வழக்கின் தீர்ப்பினை அவதானிக்க நீதிமன்றிட்கு வந்திருந்த குறித்த பெண் தீர்ப்பினை அடுத்து தலை குனிந்தவாரே நீதிமன்றை விட்டு வெளியேறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.