Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 14, 2016

கரடி தாக்கியதில் முகம் முற்றிலுமாக சிதைந்த முதியவருக்கு தீவிர சிகிச்சை!



கிருஷ்ணகிரி அருகே கரடி தாக்கியதில் முகம் முற்றிலுமாக சிதைந்த முதியவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி அருகே ஏக்கல் நத்தம் கிராமத்தை சேர்ந்த கதிரியப்பன் மகாராஜாகடை வனப்பகுதியை ஒட்டியுள்ள ஏரியில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது புதர் ஒன்றில் குட்டியுடன் பதுங்கி இருந்த கரடி , கதிரியப்பனை திடீரென தாக்கியது.
இதில் படுகாயமடைந்த கதிரியப்பனின் முகம் முற்றிலுமாக சிதைந்தது. கதிரியப்பனின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் கரடியிடம் இருந்து கதிரியப்பனை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முகத்தில் அதிக காயம் ஏற்பட்டுள்ளதால், கதிரியப்பன் மேல்சிகிச்சைக்காக சேலம் மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.