August 1, 2016
குடும்ப தகராறினால் இளம் தம்பதி விஷமருந்தி தற்கொலை
பெரம்பலூர் அருகே தாய் உடனான குடும்ப தகராறினால் மனமுடைந்த இளம்தம்பதி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தலுக்காவில் உள்ள கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த தென்னரசு வெளி நாட்டில் பணியாற்றி, பின்னர் விவசாயம் செய்து வந்துள்ளார்.
தாய் புஷ்பத்துடன் வசித்து வந்த இவர், கடந்த ஆண்டில் கொளக்காநத்தம் கிராமத்தை சேர்ந்த பவித்ரா என்ற பெண்ணை இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில் தனது மனைவியுடன், தாய் புஷ்பம் அடிக்கடி தகராறில் ஈடுபடுவதால் மனமுடைந்த இளம்தம்பதி நேற்று பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மருவத்தூர் காவல் நிலைய போலீசார் இருவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குடும்ப தகராறினால் இளம் தம்பதி விஷமருந்தி தற்கொலை
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 01, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 01, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.