Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 28, 2016

இந்துத்வா கும்பலின் தாக்குதலுக்கு அஞ்ச மாட்டேன் – முன்னாள் எம்.பி. ரம்யா


தனக்கு எதிராக மோசமான போராட் டங்களை நடத்திவரும் இந்துத்வா அமைப்பினரின் தாக்குதலுக்கு ஒருபோதும் அஞ்ச மாட்டேன் என நடிகை ரம்யா தெரிவித்துள்ளார்.

திரைப்பட நடிகையும், காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யுமான ரம்யா அண்மையில் அளித்த பேட்டியில், “நம்மைப் போலவே பாகிஸ்தானிலும் சாதாரண மக்களே வாழ்கிறார்கள். இந்தியர்களை மதித்து நட‌க்கிறார்கள். மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் சொல்வதுபோல பாகிஸ்தான் நரகம் கிடையாது. நல்ல நாடு” என தெரிவித்திருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்துத்வா அமைப்பினர் போராட்டம் நட‌த்தி வருகின்றனர். நேற்று முன்தினம் மங்களூருவில் ரம்யாவின் கார் மீது பாஜக, பஜ்ரங் தளம், ராம் சேனா உள்ளிட்ட இந்துத்வா அமைப்பினர் முட்டை வீசி தாக்குதல் நடத்தினர்.

இதுதொடர்பாக ரம்யா நேற்று பெங்களூருவில் கூறியதாவது:

பாகிஸ்தான் குறித்து நான் சாதாரணமாக கூறிய கருத்தை வேண்டுமென்றே திரித்து, தவறான செய்தி பரப்பி வருகின்றனர். எனவே நான் மன்னிப்பு கேட்கமாட்டேன். எனக்கு எதிராக பாஜக, பஜ்ரங் தளம் உள்ளிட்ட இந்துத்வா அமைப்பினர் முட்டை, தக்காளி உள்ளிடவற்றை வீசி மோசமான‌ போராட்டங்களை நடத்தி வருகின் றனர். என்னைக் கடுமையாக திட்டி நூற்றுக்கணக்கில் கடிதங்களை அனுப்பியுள்ளனர்.

அரசியல் உள்நோக்கத்துடனும், பெண் என்பதால் என்னை ஒடுக்கும் நோக்கத்துடனும் எனக்கு எதிராக வெறுப்பைக்கொட்டி வருகின்றனர். இந்துத்வா அமைப்பினரின் தாக்குதல்களுக்கு ஒருபோதும் அஞ்ச மாட்டேன். என் மீதான வழக்கை சட்டரீதியாக எதிர் கொள்வேன். இந்திய அரசிய லமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பேச்சுரிமையையும், கருத்துரிமை யையும் நிலைநாட்டுவேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

குடகு மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் விட்டல் கவுடா சோம்வார் பேட்டை நீதிமன்றத்தில் ரம்யாவுக்கு எதிராக தேச துரோக வழக்குப் பதிய கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

நன்றி ; தி இந்து

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.