Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 13, 2016

சென்னையில் தந்தையை கொல்ல முயன்ற பெண் டாக்டர் சி.சி.டி.வி. கேமரா காட்சியால் பரபரப்பு


சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜகோபால்(வயது 83). இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், தனது மகனின் ஆஸ்பத்திரியில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். இவரது மகள் டாக்டர் ஜெயசுதா, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ஆஸ்பத்திரியில் புகுந்து தனது தந்தையை கொல்ல முயன்றதாக புகார் எழுந்தது. ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சைக்காக பொருத்தப்பட்டிருந்த உயிர் காக்கும் கருவிகளையும், ஜெயசுதா பிடுங்கி விட்டதாக தெரிகிறது. சொத்து பிரச்சினையில் ஜெயசுதா இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

ஆஸ்பத்திரி படுக்கையில் படுத்திருந்த தனது தந்தையின் கைரேகையையும், ஜெயசுதா, வெற்று பத்திரத்தில் பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இந்த குற்றச்சாட்டுகள் உண்மை என்பதை நிரூபிக்கும் விதத்தில், ஆஸ்பத்திரி சி.சி.டி.வி. கேமராவிலும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த கேமரா காட்சிகள் வெளியிடப்பட்டது. அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் அடிப்படையில் கீழ்ப்பாக்கம் போலீசார் டாக்டர் ஜெயசுதா மற்றும் அவரது மகன் மீது கொலை முயற்சி வழக்கு போட்டனர். இது தொடர்பாக கோர்ட்டிலும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.