August 26, 2016
சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கர்ப்பிணியாக்கிய இளைஞர்
தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பள்ளி சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி, 5 மாத கர்பிணியாக்கிய இளைஞர் மீது மதுரை மாவட்ட போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது, சமூக ஆர்வலர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ராஜம்பாடி கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரியான செல்வபிரபு, வடபழஞ்சி அம்பேத்கர் காலனியை சேர்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 11ம் வகுப்பு பயிலும் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதில் தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இச்சம்பவம் தொடர்பாக சிறுமியிடம் பெற்றோர் விசாரித்ததில் அந்த இளைஞர், சுமார் 7 மாதங்களாக மிரட்டி, சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியது தெரியவந்துள்ளது.
மேலும், நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால், பெற்றோரையும் தம்மையும் கொன்றுவிடுவதாக மிரட்டியதால், தாம் எதுவும் தெரிவிக்கவில்லை என்கிறார் பாதிக்கப்பட்ட சிறுமி.
இந்த சம்பவம் தொடர்பாக, செல்வபிரபு மீது கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். எனினும், செல்வபிரபுவை கைது செய்வதில் போலீசார் தொடர்ந்து மெத்தனம் காட்டப்படுவதாக சிறுமியின் உறவினர்கள் வேதனை தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குனர் கதிர் கூறுகையில், ''செல்வபிரபு மீது கடும் பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை எனவும், அச்சிறுமிக்கு கவுன்சிலிங் வழங்குவதுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
சிறார்களின் பாலியல் வழக்குகளில் போலீசார் மெத்தனம் காட்டக்கூடாது என உச்சநீதிமன்றம் பலமுறை சுட்டிக்காட்டியும், மதுரை மாவட்ட போலீசாரின் அலட்சியபோக்குடன் செயல்படுவதாக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கர்ப்பிணியாக்கிய இளைஞர்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 26, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 26, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.