Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 3, 2016

கொள்ளை முயற்சி தோல்வி ஆத்திரத்தில் காவலாளிகளை கடத்திய கொள்ளையர்கள்!



கரூரில் தொழிலதிபர் வீட்டில் கொள்ளை முயற்சி தோல்வி அடைந்ததால், ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் 3 காவலாளிகளை காரில் கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் வீரராக்கியம் பகுதியைச் சேர்ந்த கருப்பண்ணன் என்பவர் பால் பண்ணை மற்றும் கொசுவலை உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ளார். இவரது தொழிற்சாலையை வளாகத்திலேயே கருப்பண்ணன் வீடும் உள்ளது.

இந்த வளாகத்தில் தனியார் செக்யூரிட்டி நிறுவனம் மூலம் காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலையில் 2 கார்களில் அடையாளம் தெரியாத கும்பல் வந்துள்ளது. அவர்கள் வீட்டு வாசலில் நின்றிருந்த காவலாளி ஒருவரை கட்டி போட்டுவிட்டு முன்பக்க கதவை உடைத்துள்ளனர்.

இதனை அறிந்த மற்றவர்கள், தொழிற்சாலைக்கு தகவல் கொடுத்து மேலும் சிலரை வரவழைத்துள்ளனர். இந்நிலையில் அதிகமான ஆட்கள் வந்ததால், ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் 3 காவலாளிகளை காரில் கடத்தி சென்று விட்டனர்.

தகலவறிந்த வந்த மாவட்ட எஸ்பி ராஜசேகரன் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளார். முன்னதாக, வீட்டின் முன்பு இருந்து சிசிடிவி காமிராவை கொள்ளை கும்பல் உடைத்தது தெரியவந்தது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.