Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 30, 2016

தற்கொலை செய்ய மாடியிலிருந்து குதித்த டிரைவர்.. கீழே போன பாட்டி மீது விழுந்து பாட்டி பலி!



தற்கொலை செய்ய மாடியிலிருந்து குதித்த டிரைவர்.. கீழே போன பாட்டி மீது விழுந்து பாட்டி பலி!
சென்னை: தற்கொலை செய்து கொள்வதற்காக மாடியிலிருந்து கீழே குதித்தார் ஆட்டோ டிரைவர். ஆனால் கீழே நடந்து போய்க் கொண்டிருந்த ஒரு பாட்டி மீது விழுந்து அந்த பாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.சென்னை அசோக் நகரைச் சேர்ந்தவர் செல்வம். அங்குள்ள குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் வசித்து வருகிறார். 35 வயதான இவருக்கும், மனைவிக்கும் இடையே நேற்று தகராறு ஏற்பட்டது. இதனால் மன வேதனை அடைந்த செல்வம் தற்கொலை செய்வதற்காக மாடியிலிருந்து கீழே குதித்து விட்டார். ஆனால் அப்போது கீழே அவர் பாட்டுக்கு நடந்து போய்க் கொண்டிருந்த 76 வயது சாரதா என்ற மூதாட்டி மீது விழுந்து விட்டார்.
செல்வம் மேலே வந்து விழுந்த வேகத்தில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் விழுந்தார் சாரதா. செல்வத்திற்கும் நல்ல அடி. இருவரும் உயிருக்குப் போராடினர். அந்தப் பகுதியே கூடி விட்டது. ஆம்புலன்ஸை வரவழைத்து இருவரையும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சாரதா பாட்டி பரிதாபமாக மரணமடைந்தார். செல்வம் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.செல்வம் மீது தற்போது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் உயிர் பிழைத்தால் கொலை வழக்கில் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.