Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 8, 2016

கொரட்டூரில் மிளகாய் பொடி கரைசல் அபிஷேகம் - பக்தர்களின் வினோத நேர்த்திக்கடன்



சென்னை அடுத்த கொரட்டூரில் அமைந்துள்ள அருள்மிகு பாடலாத்திரி சீயாத்தம்மன் கோவிலில் பத்து நாட்கள் பிரம்மோற்சவ ஆடிமாத திருவிழா முக்கிய நிகழ்ச்சியான மிளகாய் கரைசல் நேற்று வெகு சிறப்பாக நடந்தது.

கொரட்டூர், அக்ரகாரம், மாதனங்குப்பம், தானங்குப்பம், கச்சானகுப்பம், கருக்கு ஆகிய கிராமங்களில் கிராம தேவதையாகும். கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஆடித்திருவிழாவை முன்னிட்டு தினசரி அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலாங்கார பூஜை நடந்தது. முக்கிய நிகழ்வாக  நேற்று காலை அம்மனுக்கு பாலாபிஷேகம்,வேல் தரித்தல் நடந்தது. 

அம்பத்தூர்,கொளத்தூர்,பாடி,மண்ணூர்பேட்டை,வில்லிவாக்கம் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 1001 பெண்கள் பால்குடம் ஏந்தி வந்தனர்.



தொடர்ந்து, 250க்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்தி விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாக சீயாத்தம்மன் கோவிலுக்கு வந்தனர். பின்னர் 11 வாகனத்தில் திருத்தேர் வீதி உலா நடந்தது.

மேலும் அங்கு நடந்த, சடல் நிகழ்ச்சியில், முதுகு, காலில் அலகு குத்திய ஆறு பக்தர்கள் தராசு தட்டு போல் சுற்றி விடப்பட்டனர்.



பின்னர், அவர்களுக்கு மஞ்சள், திருநீறு, சந்தனம், இளநீர்,தேன், தயிர், பஞ்சாமிர்தம், நல்லெண்ணெய்,சீயக்காய்,போன்ற அபிஷேகம் செய்யப்பட்டது.

இதுவரை நடந்தது சாதாரண நிகழவுதான் இதற்கு அடுத்துதான் ஒரு கடுமையான அபிஷேகம் . இறுதியில் 30 கிலோ மிளகாய் பொடிகளால் மிளகாய் கரைசல் செய்யப்பட்டு அவர்கள் மீது அபிஷேகம் செய்யப்பட்டது.

சாதாரண பாலாபிஷேகம் போல் பக்தர்கள் அதை தாங்கி கொண்டது தான் சுவாரஸ்யம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.