August 16, 2016
“ஜல்லிக்கட்டு ஆபத்தான விளையாட்டு” - மேனகா காந்தியின் கருத்துக்கு வலுக்கும் கண்டனம்! வீடியோ
தமிழகத்தில் ஜல்லிக்கட்டை வைத்து, அரசியல் செய்யப்படுவதாக, மத்திய அமைச்சர் மேனகா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மேனகா காந்தி, கடந்த 10 ஆண்டுகளாக யானைகள் வழித்தடத்தில் செல்லும் போது ரயிலை மெதுவாக இயக்க கோரி ரயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்து வருவதாகவும், ஆனால் அவர்கள் செவி சாய்ப்பதில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், தற்போதைய சூழலில் நாளொன்றுக்கு ஒரு யானை இறப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிப்பதாக கூறிய அவர், அசாம், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் யானை வழித்தடங்கள் அழிக்கப்படுவதன் மூலமாக யானை உயிரிழப்பு அதிகரிப்பதாகவும் மேனகாகாந்தி குற்றஞ்சாட்டினார்.
ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை என்றும், இது மிகவும் ஆபத்து வாய்ந்த பாரம்பரிய விளையாட்டு என்றும் அவர் தெரிவித்தார். பாஜக அரசின் நல்ல திட்டங்களை தமிழக அமைச்சர்கள் மக்களிடம் கொண்டு செல்லாமல், ஜல்லிக் கட்டை வைத்து அரசியல் செய்து வருவதாகவும் மேனகா காந்தி குற்றஞ்சாட்டினார்.
“ஜல்லிக்கட்டு ஆபத்தான விளையாட்டு” - மேனகா காந்தியின் கருத்துக்கு வலுக்கும் கண்டனம்! வீடியோ
Reviewed by மறத்தமிழன்
on
August 16, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
August 16, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.