August 23, 2016
காதலில் விழுந்த மகளுக்கு தந்தையே போதை மாத்திரைகள் கொடுத்த கொடூரம்
திருச்சி அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தையே மகளுக்கு போதை மாத்திரை கொடுத்து வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாநகரில் உள்ள திருவெறும்பூர் அருகே வின் நகரை சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் புரோக்கர் வேலாயுதம். இவரது மகள் வாசவி சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது அஸ்வின் குமார் என்பவரை காதலித்துள்ளார்.
அஸ்வின் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த வேலாயுதம் மகளை திருச்சி அழைத்து சென்று, போதை மாத்திரை கொடுத்து வீட்டில் அடைத்து வைத்துள்ளார்.
இது குறித்து திருவெறும்பூர் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் மதன் தலைமையிலான போலீசார் வாசவி வீட்டுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது வாசவியை வேலாயுதம் மற்றும் அவரது குடும்பத்தினர் தனி அறையில் அடைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் வாசவியிடம் மேற்கொண்ட விசாரணையில் தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தன்னை அடைத்து வைத்துள்ளதாகவும், நாள்தோறும் 12 மாத்திரைகள் வரை கொடுத்ததாகவும் தெரிவித்தார்.
உடனடியாக வாசவியை மீட்ட போலீசார் அவரது விருப்பத்தின் பேரில் அவரை காதலர் அஸ்வினுடன் சேர்த்து வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காதலில் விழுந்த மகளுக்கு தந்தையே போதை மாத்திரைகள் கொடுத்த கொடூரம்
Reviewed by மறத்தமிழன்
on
August 23, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
August 23, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.