August 24, 2016
போலி சான்றிதழ்கள் அளித்து ராணுவத்தில் சேர முயற்சி : போலீசார் தீவிர விசாரணை!
போலி சான்றிதழ்கள் அளித்து ராணுவத்தில் சேர முயற்சி செய்த 41 பேரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருவண்ணாமலையில் உள்ள மாவட்ட விளையாட்டரங்கில் கடந்த 19 ஆம் தேதி முதல் ராணுவ ஆட் சேர்ப்பு முகாம் நடந்து வருகிறது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், மற்றும் கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 9 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 22 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில் இராணுவ தலைமையிடத்தில் இருந்து சுமார் 11௦ பேர் போலியான ஆவணங்கள் கொடுத்து இராணுவத்தில் சேர முயற்சித்துள்ளதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இன்று 41 பேரை திருவண்ணாமலை போலீசாரிடம் ராணுவத்தினர் ஒப்படைத்துள்ளனர் . இதன் அடிப்படையில் அவர்கள் அளித்த சான்று மற்றும் ஆவணங்கள் போலியாக எப்படி கிடைக்கப்பெற்றது யார், அதை தயார் செய்தனர் என காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலி சான்றிதழ்கள் அளித்து ராணுவத்தில் சேர முயற்சி : போலீசார் தீவிர விசாரணை!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 24, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 24, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.