August 14, 2016
துணிக்கடையில் தீ விபத்து : பத்து லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்!
குடியாத்தம் அரசு மருத்துவமனை அருகே தனியார் துணிக்கடை ஒன்றில் நேற்றிரவு நிகழ்ந்த தீ விபத்தில், சுமார் பத்து லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனை அருகே உள்ள துணிக்கடை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது தண்ணீர் தீர்ந்து விட்டதால் தீயினை அணைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில் தீ வேகமாக பரவியதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் வாளிகளில் தண்ணீரை எடுத்து சென்று தீயினை அணைக்கும் பணியை மேற்கொண்டனர். இதனிடையே மீண்டும் தண்ணீர் நிரப்பப்பட்ட வாகனத்தில் வந்த தீயணைப்பு வீரர்கள், துரிதமாக செயல்பட்டு தீயிணை முற்றிலுமாக அணைத்தனர். இந்த விபத்தில் சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள் மற்றும் பொருட்கள் எரிந்து சேதமாகியிருக்ககூடும் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
துணிக்கடையில் தீ விபத்து : பத்து லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 14, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 14, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.