Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 1, 2016

சசிகலா புஷ்பா: அன்று முதல் இன்று வரை..



தூத்துக்குடி மாவட்டம், முதலூரரை அடுத்த அடையல் கிராமத்தை கிராமத்தை சேர்ந்தவர் மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா. குறுகிய காலத்தில் அதிமுகவில் அசுர வளர்ச்சி கண்டவர் இவர். 

தூத்துக்குடி மாவட்ட அதிமுக மகளிர் அணிச் செயளாலர், தூத்துக்குடி நகர மேயர், மாநிலங்களவை உறுப்பினர் என கட்சிக்குள் இவரின் வளர்ச்சி வேகமாக இருந்து வந்தது.

இவர் தூத்துக்குடி மேயராக பதவி வகித்த போதே மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டார், இதன் காரணமாக தனது மேயர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு எம்.பி ஆனார், மேலும் அதிமுகவின் ராஜ்யசபா கொறடாவாகவும் அறிவிக்கப்பட்டார்
சசிகலா புஷ்பா.

எந்த அளவுக்கு இவரின் வளர்ச்சி இருந்ததோ அதே அளவுக்கான சர்ச்சைகளிலும் சிக்கினார் இவர்.

பூதமாக உருவெடுத்த புகைப்படங்கள்:

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவுடன் சசிகலா புஷ்பா நெருக்கமாக இருப்பது போலான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் பரபரப்பாக பரவி வந்தது. எனினும் இது குறித்து சசிகலா புஷ்பாவின் கணவர் அது  கம்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் போலியாக சித்தரிக்கப்பட்டவை என விளக்கம் அளித்திருந்தார்.



அதிர்ச்சியை கிளப்பிய ஆடியோ:

தனது ஆண் நண்பர் ஒருவருடன் சசிகலா புஷ்பா, பேசும் ஆடியோவில் தூத்துக்குடியில் அதிமுக தோற்கும் என்றும் தான், போதையில் இருப்பதாகவும் கூறுகிறார். அந்த ஆடியோ மிகவும் வைரலாக சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது.

திருச்சி சிவாவுக்கு அறை!

ஏற்கெனவே, திருச்சி சிவாவுடன் புகைப்பட சர்ச்சை கிளம்பிய நிலையில், மீண்டும் கடந்த சனிக்கிழமை (30.07.2016) அன்று மதியம் டெல்லி விமான நிலையத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவை கன்னத்தில் அறைந்ததாக புதிய சர்ச்சை வெடித்தது.

ஜெயலலிதாவை பற்றி விமர்சனம் செய்ததன் காரணமாக திருச்சி சிவாவை தாக்கியதாக சசிகலா புஷ்பா விளக்கம் அளித்தார். இது அரசியல் வட்டாரத்தில் அனலைக் கிளப்பியது.






கட்சியிலிருந்து நீக்கம்:

இந்நிலையில் கட்சியில் நற்பெயருக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதால் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு மற்றும் அனைத்து பொறுப்புகளிலும் இருந்தும் சசிகலா புஷ்பா நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா இன்று அறிவித்துள்ளார்.

பதவி விலகப்போவதில்லை:

தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக பரபரப்பான குற்றச்சாட்டை மாநிலங்களவைவில் முன்வைத்த சசிகலா. கட்சியின் தலைமை தன்னை பதவி விலக நிர்பந்திப்பதாகவும், எனினும் கட்சிக்கு என்றுமே விசுவாசத்துடன் இருப்பதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தார் சசிகலா, மேலும், 2020ஆம் ஆண்டு வரை தனக்கு பதவிக்காலம் உள்ளதால் மாநிலங்களவை உறுப்பினர் பதவிவை ராஜினாமா செய்யப்போவதில்லை என்று சசிகலா புஷ்பா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

நன்றி 7 N E WS

1 comment:

  1. ADMK will fall from it's own party members only. Count down started from Sasi Kala Pushpa.

    ReplyDelete

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.