August 13, 2016
பிரதமர் மோடி படத்துடன் உடை: நடிகை ராக்கி சாவந்த் மீது வழக்கு
இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்காவில் நடந்த விழா ஒன்றில் பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த் கலந்து கொண்டார். விழாவுக்கு வந்திருந்த அவர் பிரதமர் மோடியின் படங்கள் அச்சிடப்பட்ட ஆபாச உடையை அணிந்திருந்தார். இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. பிரதமர் மோடியை, ராக்கி சாவந்த் அவமதித்து விட்டதாக பெரும் சர்ச்சையும் கிளம்பியது.
இதைத்தொடர்ந்து ராக்கி சாவந்துக்கு எதிராக உத்தரபிரதேசத்தின் மீரட் நகரை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று உள்ளூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணையின் போது தொண்டு நிறுவனம் சார்பில் ஆஜரான வக்கீல் நிதின் அலுவாலியா கூறுகையில், ராக்கி சாவந்த் மீது பொது இடங்களில் ஆபாசமாக நடந்து கொள்ளுதல், அவமதிக்கும் நோக்கில் வேலைப்பாடு செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி அதன் அடுத்தகட்ட விசாரணையை 17–ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
பிரதமர் மோடி படத்துடன் உடை: நடிகை ராக்கி சாவந்த் மீது வழக்கு
Reviewed by மறத்தமிழன்
on
August 13, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
August 13, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.