Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 29, 2016

மதுக்கடைகளை கள்ளுக்கடையாக மாற்ற கோரிக்கை!



தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் செ.நல்லசாமி நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
 
அவ்போது அவர் கூறுகையில் தமிழகத்திற்கு 1 டிஎம்சி தண்ணீர் கூட வழங்க முடியாது என கர்நாடக அரசு பிடிவதமாக தெரிவித்துள்ளதை இந்த கூட்டமைப்பு வண்மையாக கண்டிக்கிறது. கர்நாடகாவில் ஜுன், ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் பருவமழை எவ்வளவு பெய்துள்ளது, இதன் மூலம் அங்குள்ள அணைகளில் எவ்வளவு தண்ணீர் இருப்புள்ளது என கணக்கீட்டு மத்திய அரசு தமிழகத்திற்கு உடனடியாக தண்ணீர் வழங்க வேண்டும். மேலும் காவிரி நதி நீர் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் விவாத்தித்து தீர்வு காணவேண்டும்.
தமிழகத்தில் பருவமழை குறைந்த அளவில் பெய்துள்ளதால் வறட்சியை நோக்கி தமிழகம் சென்று கொண்டிருப்பதால் தமிழகத்தை மத்திய அரசு வறட்சி மாநிலமாக அறிவித்து நிவாரணப்பணிகளை தொடங்கிட வேண்டும் என பேசி அவர், அக்டோபர் 2-ம் தேதி காந்தி பிறந்த நாளில் தமிழகத்தில் மேலும் 500 மதுகடைகளை அரசு மூட உள்ளதாகவும், கள்ளுக்கு விதித்துள்ள தடையை நீக்கி முதல் கட்டமாக 1000 கடைகளையும் கள்ளுக்கடையாக மாற்ற வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.