Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 16, 2016

குஜராத்தில் தலித் மக்கள் ஊருக்குள் நுழைய எதிர்ப்பு: பேரணியை முடித்து வீடு திரும்பியவர்கள் மீது தாக்குதல்



குஜராத் மாநிலம் உனா நகரில் சுதந்திர தின பேரணியை முடித்து விட்டு வீடு திரும்பிய தலித் மக்களை ஊருக்குள் நுழைய விடாமல் ஒரு பிரிவினர் தடுத்தால் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே குஜராத்தில் இறந்த பசுவின் தோலை உரித்ததாக கூறி தலித் இளைஞர்கள் கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. மேலும் இந்த சம்பவம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான அடக்குமுறையாக இது பார்க்கப்பட்டது. இதைக் கண்டித்து குஜராத் மாநிலத்தில் தலித் மக்கள் ஒன்று கூடி கடந்த 5ம் தேதி அகமதாபாத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டனர்.

350 கி.மீ கொண்ட அவர்களது பயணம் நேற்று உனா வந்தடைந்தது. இந்த பேரணியில் ரோஹித் ஹிமுல்லாவின் தயார் மற்றும் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்ஹயா குமார் ஆகியோர் பங்கேற்றனர். பேரணியின் முடிவில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தை முடித்த பின்னர் அனைவரும் கலைந்து வீடுகளுக்கு சென்றனர்.

அப்போது அவர்களை வழிமறித்த ஒரு பிரிவினர்  கற்களாலும் கட்டைகளாலும் தாக்கினர். இதனால் அச்சமடைந்த தாளித்த மக்கள் அருகிலிருந்த காவல் நிலையங்களை தேடி சென்றனர். மேலும் உனா நகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பாதுகாப்பு வழங்கக் கோரி தலித் மக்கள் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.