August 6, 2016
அதிர்ச்சி தரும் பாலியல் வன்புணர்வு வீடியோ வியாபாரம்!
பாலியல் வன்புணர்வு வீடியோக்கள் ரூ.50 முதல் 150 ரூபாய் வரை இலகுவாக விற்பனைக்கு கிடைப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
சமீபகாலமாக, உத்தரபிரதேச மாநிலத்தில், பாலியல் வண்புனர்வு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அச்சம்பவங்களின் போது எடுக்கப்பட்ட வீடியோக்கள், சிடி கடைகளில் விற்பனைக்கு கிடைப்பதாக புகார் எழுந்துள்ளது.
பாலியல் சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள், அதனை வீடியோ எடுத்து பின்னர் அதையே ஒரு கருவியாக வைத்து மிரட்டி அப்பெண்ணை மீண்டும் மீண்டும் பாலியல் வன்புணர்வு செய்யும் சம்பவங்கள் உத்தரபிரதேசத்தில் பரவலாக நடந்து வருவது கவலையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.
இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களால் எடுக்கப்பட்ட வீடியோக்கள் சிடி கடைக்காரர்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மிகவும் தெரிந்த நபர்களோ அல்லது அவர்களுக்கு தெரிந்தவர்களுக்கு மட்டுமே இவ்வாறான வீடியோக்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் வாடிக்கையாளர்களின் மொபைலுக்கோ அல்லது பெண் டிரைவுக்கோ நேரடியாகவே வீடியோக்கள் டிரான்ஸ்ஃபர் செய்யப்படுவதாகவும் அதிர்ச்சி அளிக்கிறார் ஒரு கடைக்காரர்.
இதுகுறித்து, கடைக்காரர் ஒருவர் கூறும்போது, ”ஒரு வீடியோவில் 20 வயது மதிக்கத்தக்க ஒரு இளம் பெண்ணை 2 நபர்கள் கீழே தள்ளி விடுகின்றனர், ஒருவன் அப்பெண்ணின் ஆண் நண்பரை அடிக்கின்றான், அப்போது அவன் அழுதுகொண்டே எங்களை விட்டு விடுங்கள் என்றும் கெஞ்சி மன்றாடுகிறான், மேலும் அந்த பெண் குறைந்தபட்சம் வீடியோ எடுப்பதையாவது தவிர்க்குமாறு கெஞ்சுவது போலவும் நீள்கிறது ஒரு வீடியோ” என அதிர்சித் தகவல் அளித்தார்.
இந்த வியாபாரத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் முயன்றாலும், ரகசியமாக நடந்து வருவதன் காரணமாக முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை என்பது காவல்துறை அதிகாரி ஒருவரின் கருத்து.
#LawlessUP என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் இந்த வாரம் டிரெண்டிங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
உத்தரபிரதேசத்தில் நடக்கும் இந்த வியாபாரம் பெண்கள் மீதான வன்புணர்வு சம்பவங்களைக் காட்டிலும் அதனை வியாபாரமாக்கி பாதிக்கப்பட்ட பெண்களை சமூகத்திற்கு அடையாளப்படுத்துவதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கே மீண்டும் தண்டனை அளிப்பது போன்றதாகும்.
குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிக்கியவர்கள், கடுமையான தண்டனைகள் உடனடியாக கிடைக்காத காரணத்தால், சுதந்திரமாக நடமாடும் நிலையில் பாதிக்கப்பட்ட பெண்கள் அவமானத்தால் தற்கொலை செய்து கொள்வது வருத்தத்திற்குரியது.
கடந்த, 2014ஆம் ஆண்டில் மட்டும் பெண்களுக்கெதிராக கற்பழிப்பு, மானபங்கம், கடத்தல் உள்ளிட்ட 3,37,922 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது. இது 2013ஆன் ஆண்டைக் காட்டிலும் 9% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் ஒருமித்த கருத்தாகும்.
அதிர்ச்சி தரும் பாலியல் வன்புணர்வு வீடியோ வியாபாரம்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 06, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 06, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.