August 23, 2016
சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்த பெண் மாயம்: கடைப்பொருட்களை சேதப்படுத்திய உறவினர்கள்
திருவள்ளூரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்த பெண் ஒருவர் மாயனதை அடுத்து ஆத்திரமடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சூப்பர் மார்க்கெட்டில் இருந்த பொருட்களை உடைத்துச் சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டைச் சேர்ந்த சந்தியா என்பபவர் திருவள்ளூரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் 5 ஆண்டுகளாகப் பணிபுரிந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் 15-ஆம் தேதி வழக்கம் போல் பணிக்குச் சென்ற சந்தியா வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த பெற்றோர் சூப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம் விளக்கம் கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் சரியாகப் பதில் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறி சந்தியாவின் உறவினர்கள் சூப்பர் மார்க்கெட் உள்ளே புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கிச் சேதப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்த பெண் மாயம்: கடைப்பொருட்களை சேதப்படுத்திய உறவினர்கள்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 23, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 23, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.